சற்று முன்
Home / செய்திகள் / பேசிக்கொண்டிருக்காமல் உருப்படியாய் ஏதும் செய்யுங்கள்

பேசிக்கொண்டிருக்காமல் உருப்படியாய் ஏதும் செய்யுங்கள்

தமிழ் அரசியல் கைதிகள் மரண போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் நிலையில் வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல் அவர்களுடைய விடுதலைக்கு தேவையான நடவடிக்கைகளை சம்மந்தன், சுமந்திரன் போன்றவர்கள் எடுக்கவேண்டும். மேற்கண்டவாறு தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்த சங்கரி கூறியுள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுங்கள் அல்லது புனர்வாழ்வு வழங்கி விடுதலை செய்யுங்கள் எனக்கேட்டு கடந்த 19 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். அது வெறுமனே உணவு தவிர்ப்பு போராட்டம் மட்டுமல்ல. அது மரணப்போராட்டம். போராட்ட த்தில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கும் என்ற நிலையில் அவர்களுடைய உயிர்கள் காப்பாற்றப்படவேண்டியது கட்டாயம்.

நான் அவர்களை சந்திப்பதற்காக நேரில் சென்றிருந்தபோது அவர்கள் மருந்தையும் ஒறுத்து போராட்டம் நடாத்திக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு கூறினேன் உங்களுடைய உயிர்கள் பெறுமதியானை அவை காக்கப்படவேண்டியவை. ஆகவே மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள் என. அவர்கள் அதற்கு சம்மதித்தார்கள். இவ்வாறு அவர்கள் மரண போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பில்தான் சட்ட வல்லுனர்கள் இருக்கிறார்கள் என கூறிக்கொண்டிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பு சம்மந்தன், சுமந்திரன் போன்றவர்கள் இந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கவேண்டும். மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்திலேயே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜனாதிபதி ஒரு குழுவை அமைத்து அதன் ஊடாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யலாம். மற்றயது அரசியல் கைதிகள் தமது தண்டணை காலத்தில் நன்னடத்தையை வெளிப்படுத்தினால் அவர்கள் தமது குடும்பங்களைச் சென்று பார்த்து வருவதற்கு அனுமதியை கொடுக்கலாம். இந்த விடயங்களையாவது சட்டவல்லுனர்கள் என கூறுபவர்கள் அரசுடன் பேசி செய்திருக்கலாம்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com