“பொன் பூமி” வீடமைப்பு திட்டம் கையளிப்பு

மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கேகாலை அட்டால வாழ் பெருந்தோட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “பொன் பூமி” வீடமைப்பு திட்டம் அப்பிரதேச மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் (23-06-2016) அன்று இடம்பெற்றது.

இதன் போது ஒவ்வொன்றும் 12 இலட்சம் பெறுமதியான 550 சதுரஅடி அளவுள்ள 12 தனி வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்தீத் சமரசிங்க அவர்கள் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி உட்பட ஏனையோர் கலந்துகொண்டனர்.340A0806 340A0814 340A0856 340A0871 340A0878

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com