பெற்றோல் குண்டு வீசியதாக பொய் முறைப்பாடு!

வரணி நாவற்காடுபகுதியில் தனிப்பட்ட காணிப்பிரச்சிணை ஒன்றினை பெரிதாக்கி அயல்வீட்டுக்காரை கைது செய்வதற்காக ,தனது வீட்டிற்கு பெற்றொல் குண்டு வீசியதாக கூறிபொய் முறைப்பாடுபதிவு செய்துள்ள சம்பவம் நேற்று (12) கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டது.

வீட்டில் இருந்த லாம்பு திரியினை மூட்டி வீட்டில் இருந்தவர்களே வீசிவிட்டு, தங்கள் வீட்டுக்கு பெற்றொல் குண்டு வீசியுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

சம்பவ இடத்திற்குசென்ற பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மேற்படி சம்பவம் பொய்யானது எனகண்டுபிடித்துள்ளனர்.

மேலும் வீட்டில் இருந்தவர்களேபெற்றோல் தோய்ந்த லாம்பு திரியினை போட்டுதீ மூட்டியுள்ளதாக கண்டறிந்துள்ளனர்.
தனிப்பட்ட காணிப்பிரச்சினை  ஒன்றினை பெரிதாக்கி எதிர்  தரப்பினரை கைது செய்யவைக்கும் நோக்கோடு இச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com