சற்று முன்
Home / செய்திகள் / பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் தீவிரவாதத் தாக்குதலா ?

பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதல் தீவிரவாதத் தாக்குதலா ?

பெர்லின் நகரத்தின் மையத்தில் மக்கள் நெரிசல் மிகுந்த சந்தை பகுதியில் 12 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான லாரியை ஓட்டிச் சென்றவர் என்று தாங்கள் கருதும் நபரிடம் ஜெர்மனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 48 பேர் காயமடைந்துள்ளனர்.

தாக்குதலுக்கு காரணமான லாரியை ஓட்டியவர் என்று சந்தேகிக்கப்படும் நபர், பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட குடியேறி என்று பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அவருக்கு தாற்காலிக குடியிருப்பு அனுமதி வழங்கப்பட்டது. சிறு குற்றங்கள் செய்தவர் என்ற வகையில் போலீசாரால் அவர் ஏற்கெனவே அறியப்பட்டவர்.
அதே நேரத்தில், இது தீவிரவாதத் தாக்குதலாகத்தான் இருக்கும் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பயணி ஒருவர் இறந்து கிடந்ததைக் கண்டுபிடித்த வேளையில், அதற்கு அருகில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது,

நகரின் மேற்கே பிரதான வர்த்தகப் பகுதியான குர்ஃப்ரெஸ்தென்டம் அருகே பிரெட்ஸிபிளெட்ஸ் பகுதியில் இந்த சந்தை உள்ளது.
உள்துறை அமைச்சரோடும், பெர்லின் நகர மேயரோடும் ஜெர்மனி சான்சலர் ஏங்கெலா மெர்க்கல் தொடர்பில் இருந்து வருவதாக அவருடைய செய்தி தொடர்பாளர் ஸ்டெஃபென் ஸய்பர்ட் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“இறந்தோருக்கு இரங்கல் தெரிவித்து துக்கம் அனுசரிக்கிறோம். காயமுற்ற பலரும் நிச்சயம் உதவி பெறுவார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதல்

“பெர்லினுக்கும், ஜெர்மனிக்கும் இது மிக பயங்கரமான மாலைபொழுது” என்று ஜெர்மனி அதிபர் யோவாகிம் கௌக் கூறியிருக்கிறார்,
பிரெட்ஸிபிளெட்ஸ் பகுதிக்கு அருகில் ஆபத்தான நிலைமைகள் எதுவும் தோன்றவில்லை என்று பெர்லின் காவல்துறை தெரிவித்திருக்கிறது,
அந்த பகுதியை தவிர்த்துவிட்டு வீட்டில் தங்கியிருக்குமாறு அவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தங்களுடைய உறவினர்கள் பற்றி தகவல் அறிவதற்கு +49 30 54023 111 என்ற உதவி தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.

“பாதுகாப்பு சோதனை” என்கிற பக்கத்தை உருவாக்கி இருக்கும் சமூக ஊடகமான பேஸ்புக், பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை பிறருக்கும் அறிவிக்கும் வசதியை வழங்கியுள்ளது.
பிரான்ஸ், தன்னுடைய கிறிஸ்துமஸ் சந்தைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்கிறது,

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com