பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு வாழ்க்கை செலவு கொடுப்பனவாக ரூ.10,000

1191522769Untitled-1பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு கொடுப்பனவாக வழங்கப்படும் 6000 ரூபா போதாது என்பதை நான் அறிவேன், அதற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற வகையிலும் மலைய மக்களின் வாக்கு பலத்தில் பாராளுமன்றம் சென்றவன் என்ற வகையிலும், என்ன செய்ய வேண்டுமோ அதை முறையாக செய்து வருகின்றேன், எனவும் அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இதனை குழப்பும் வகையில் செயற்பட வேண்டாம் என்று சுட்டிக்காட்டிய அவர், யார் யார் எப்படி வேண்டுமானாலும் துள்ளலாம் கடைசியில் தீர்வு வழங்க போகின்றவன் நானே எனவும் கூறினார்.

இன்று (8) கல்வி அமைச்சில் நடைபெற்ற விஷேட கூட்டம் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு வாழ்க்கை செலவு கொடுப்பனவாக 10,000 ரூபாவை வழங்குவதற்கு பாராளுமன்றத்தில் அமைச்சரவை பத்திரம் ஒன்று கடந்த 2016.05.13 அன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர் உதவியாளர்களின் கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி இதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட அமைச்சவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்கப் பெற்றதும் அவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படும்.

2016.06.07 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி சம்பந்தமான உப குழு கூட்டத்திலும் இது தொடர்பாக பேசப்பட்டுள்ளது.

அதிலும் இவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் என உணரப்பட்டுள்ளது. பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு அவர்களின் கோரிக்கை நிறைவேற உள்ள நிலையில் சிலர் தங்களது மூக்குகளை நுழைத்துக் கொள்ள வேண்டாம்.

பொங்கல் பொங்கும் போது பானையை உடைத்து விட வேண்டாம். பாராளுமன்றத்தில் ஒரு விடயம் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் மாகாண சபையில் விவாதிப்பதோ, வாதாடுவதோ அல்லது ஊடகங்களில் அறிக்கைவிடுவதோ, கேலி கூத்தான விடயமாக கருதுகின்றேன்.

இவர்கள் மாகாண சபையில் செய்ய வேண்டிய விடயங்களை செய்யலாம். மாகாண கல்வி அமைச்சில் செய்ய வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்கின்றது, என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com