சற்று முன்
Home / செய்திகள் / பூமியை அச்சுறுத்தும் ஆபத்து – “நிபிரு” கிரகம் உலகை அழிக்குமா ?

பூமியை அச்சுறுத்தும் ஆபத்து – “நிபிரு” கிரகம் உலகை அழிக்குமா ?

பூமி அழிந்துபோகும் என்று செய்தி பலமுறை கூறப்பட்டு, அவை பொய்யாகிப் போயும்விட்டது.

ஆனாலும் இந்த அச்சம் அவ்வப்போது உலக மக்களை ஆட்டிவைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

தற்போதும் இதுபோன்ற ஒரு பயம், மேலை நாடுகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது.

‘பிளானட் எக்ஸ்’ அல்லது ‘நிபிரு’ எனப்படும் கிரகம் பூமி மீது மோதத் தயா ராக இருப்பதாக ஒரு செய்தி பல ஆண்டுகளுக்கு முன் வெளியானது.

இந்தக் கிரகம் கண்டுபிடிக்கப்பட்ட 1995-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை பூமியை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றது.

இந்தக் கிரகம்தான் பூமியை விரைவில் அழிக்கும் என்பது ஆய்வாளர் களின் கருத்தாக உள்ளது.

இதை பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டாலும், அதை வெளிப்படுத்த வில்லை. ஆனாலும் அது பொய்யான செய்தி என்பது மட்டுமே அதிகளவில் பரப்பப்படுகிறது.

விண்வெளி ஆய்வில் முன்னிலையில் உள்ள ‘நாசா’வும் கூட இருண்ட கிரகம் உள்ளது என்றும், அது பூமியில் மோதும் என ஒத்துக்கொண்டுள்ளது.

புளூட்டோ கிரகத்தைத் தாண்டி மிகவும் நீள் சுற்றுப்பாதையில் சூரியனையும் சுற்றிவரும் குறிப்பிட்ட மர்ம அமைப்பை, கோளா அல்லது விண் கல்லா என்பதை மட்டும் வெளிப்படையாகக் கூறாமல் ‘நிபிரு’ என்றே பெயரிட்டுள்ளனர்.

இப்போது பூமியில் அடுத்தடுத்து இடம்பெறும் புவி அதிர்வுகள், கடல் கொந்தளிப்புகள், கண்ட நகர்வுகள் அடிப்படையில், இந்தக் கிரகம் பூமியில் மோத வேகமாக பயணித்து வருவதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த இருண்ட கிரகம் தொடர்பாக ஆரம்பத்தில் கூறப்பட்ட கருத்துகள் அடிப்படையில்தான் இப்புதிய செய்தி வலுப்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட கிரகம், பூமியின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையும்போது பூமியின் காந்தப்புலனிலும், ஈர்ப்பு சக்தியிலும் பல மாற்றங்கள் ஏற்படும், அதனால் பல கடற்கொந்தளிப்புகளும் ஏற்படும் என்றும், பூமி மீது பல விண்கற்கள் விழும் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படியே இப்போது குறுகிய காலகட்டத்தில் பூமியில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்தக் காரணங்களால்தான் பூமியின் அழிவு வெகுதொலைவில் இல்லை என ஆய்வாளர்கள் உறுதிபடக் கூறுகின்றனர். ஆனாலும் இப்போதைய புவி மாற்றங்களுக்கு, சமீபத்தில் ஏற்பட்ட ‘சூப்பர் மூன்’தான் காரணம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

ஆனால், ‘நிபிரு’ எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று முன்கூட்டியே தெரிவித்திருக்கிறபடி நிகழ்வுகள் நடந்துவருவதால் அச்சத்தைக் கூட்டியிருக்கிறது.

அதேபோல, சமீபத்தில் இந்த இருண்ட கிரகம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்துவிட்டதற்கான ஆதாரம் வெளிவந்திருப்பதாகவும் கூறப்படு கிறது.

இந்தக் கிரகம் பூமியில் மோதுவதற்கு முன்பே பால்வீதியில் பல மாற்றங்கள் ஏற்படும், கோள்களின் பாதைகளில் தடுமாற்றமும் உண்டாகும். அதுவும் நடந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது வேற்றுக்கிரகவாசிகளின் கிரகம் என்று கூறும் மற்றொரு தரப்பும் உள்ளது. நமது சூரியனில் இருந்து சக்தியை உறிஞ்சும் மர்மப்பொருள் என்ற தலைப்பில் ஒரு வீடியோவை சமீபத்தில் நாசா வெளியிட்டது.

அந்த மர்மப்பொருள் இதுதானா என்ற விவாதமும் சூடுபிடித்திருக்கிறது. ‘இருண்ட கிரகத்தை’ அறிவியல் வெளிச்சம் ‘பளிச்’சென்று வெளிப் படுத்தாத வரை, பூமிவாசிகளுக்கு ‘திக்…திக்…’தான்!

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com