சற்று முன்
Home / செய்திகள் / பூநகரியில் மக்களை விட ஆமி அதிகம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

பூநகரியில் மக்களை விட ஆமி அதிகம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரி பிரதேசத்தில் உள்ள மக்கள் தொகையை விட இராணுவத்தின் எண்ணிக்கை அதிகம் என்று தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வடக்கில் ஒன்றரை இலட்சம் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளமையானது இராணுவ ஆக்கிரமிப்பாக அன்றி வேறு என்னவாக இருக்க முடியும் என்று  கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கிலுள்ள மக்களது எண்ணிக்கை சுமார் ஒரு மில்லியனாக உள்ள நிலையினில் இவ்வாறு படையினர் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே வேளை வடக்கிலுள்ள இராணுவத்தை ஏனைய மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு கோரினால் அது இனவாதமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்கனவே வடக்கிலுள்ள படையினரை முற்றாக வெளியேற்றவும் தேவையேற்படின் காவல்துறையினரை அதிகரிக்கவும் வடக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளமை தெரிந்ததே.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com