சற்று முன்
Home / செய்திகள் / பூஜித, ஹேமசிறியின் வங்கி, தொலைபேசி தகவல்களை ஒப்படைக்க உத்தரவு..

பூஜித, ஹேமசிறியின் வங்கி, தொலைபேசி தகவல்களை ஒப்படைக்க உத்தரவு..

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் மீதான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தடுக்க தவறிய வழக்கில், கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 16 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அத்துடன், பூஜித மற்றும் ஹேமசிறியின் வங்கிக்கணக்குகள், தொலைபேசி உரையாடல்களை பரிசோதனை செய்யவும் அனுமதியளித்தது.

இந்த வழக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் இன்று (3) விசாரணைக்கு வந்தது.

துணை சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ், இதேபோன்ற குற்றத்தைச் செய்த மேலும் சில மூத்த பொலிஸ் அதிகாரிகளை கைது செய்ய சட்டமா அதிபர் சிஐடிக்கு அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.

பூஜித, ஹேமசிறி தொடர்பான வங்கி கணக்குகளை வழங்க 80 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

ஜெயசுந்தரா மற்றும் பெர்னாண்டோவின் தொலைபேசி பதிவுகளை சி.ஐ.டி.க்கு சமர்ப்பிக்கவும் தலைமை நீதவான் உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் மேலதிக விசாரணை டிசம்பர் 05ம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், விசாரணையின் முன்னேற்றத்தை அன்று சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com