சற்று முன்
Home / பிரதான செய்திகள் / பூசி மொழுக வந்த இடத்தில் மூக்கு உடைபட்டது

பூசி மொழுக வந்த இடத்தில் மூக்கு உடைபட்டது

(06.07.2015) முன்னர் தான் கூறிய கருத்துக்களை அவை தவறானது எனினும் அவற்றை நியாயப்படுத்தியும் கொழும்பில் ஒரு கருத்து வெளிநாட்டில் மற்றொரு கருத்து யாழ்ப்பாணத்தில் தேர்தல் மேடைகளில் பிறிதொரு கருத்துமாக தனது தேர்தல் பிரச்சாரங்களை பரபரப்பிற்குப் பஞ்சமில்லாத களங்களாக முடுக்கிவிட்டுள்ளார் சட்டவாளரான வேட்பாளர் சுமந்திரன்.

1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஜி.ஜி. பொன்னம்பலத்தை ஹெட்ட கொபேகடுவ தோற்கடித்திருந்ததாக தவறான தரவு ஒன்றினைக் கூறியபோது மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அதனைச் சுட்டிக் காட்டினார். அவரது கருத்தை உதாசீனம் செய்த சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் முதலிடத்தில் ஹெட்ட கொபேகடுவவே வந்ததாக மறுதலித்து மறுதலித்துக் கூறினார். ஒரு கட்டதில் தான் தான் தெளிவாகக் கூறுவதாகவும் இது தொடர்பில் விவாதம் தேவையற்றது கொப்பேக்கடுவ தான் முதலாவதாக வந்தவர் என்றுகூறி சடுதியாக முடித்துக் கொண்டார்.

உண்மையில் 1982 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அமரர் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் தான் அதிக வாக்குகளைப் (87,263) பெற்றார். அதே நேரம் கொப்பேக்கடுவ அவர்கள் (77,300) வாக்குகளைப் பெற்று யாழில் இரண்டாவதாக வந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் மதனி நெல்சனும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கஜதீபனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத் தேர்தல் யாழ் மாவட்ட வேட்பாளருமான சுமந்திரனுக்கு எதிராாக கருத்துக்கள் தெரிவித்ததாக சில இணைய ஊடங்களில் செய்திகள் வெளியாகியிருந்தநிலையில் அவை போலியான குற்றச்சாட்டுக்கள் நாங்கள் ஓரணியில்தான் நிற்கின்றோம் எனக் காட்டவே இந்த ஊடக சந்திப்பு என மதனி நெல்சன் – வடமாகாணசபை உறுப்பினர்களான கஜதீபன், சுகிர்தன், சயந்தன், சிவயோகன், ஆனோல்ட் ஆகியோரோடு ஒன்றிணைந்து ஊடக சந்திப்பினை சுமந்திரன் மேற்கொண்டிருந்தார்.

அதன்போது ஊடகவியலாளர் தற்போது பெரும்பான்மைக் கட்சிகளிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறினீர்கள் முன்னர் சரத் பொன்சேகாவிற்கும்,மைத்திரிபாலசிறிசேனாவிற்கும் வாக்களிற்கக் கூறினீர்களே என கேள்வி எழுப்பியபோது அதற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தவறான தரவுகளை வௌயிட்டு அதனை நியாயப்படுத்தி வாதாடியிருந்தார்.

இலங்கை தேர்தல் திணைக்களத்தின் அதிகார பூர்வ இணையத்தில் வெளியான தரவு.


About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை !

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com