புஸல்லாவை இளைஞனின் மரணத்துக்கு நீதி வேண்டும்! – மலையக ஆய்வு மையம் வலியுறுத்து

shakthivelபுஸல்லாவையில் பொலிஸ் தடுப்பிலிருந்த இளைஞர்  ஒருவர் மர்மமாக உயிரிழந்துள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள மலையக ஆய்வு மையம், குறித்த மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை தமது அமைப்பின் போராட்டம் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் மேற்படி அமைப்பின் செயலாளர் அருட்சந்தை மா. சத்திவேல் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் தடுத்த வைக்கப்பட்டிருந்த இளைஞன் நடராஜா ரவிச்சந்திரனின் மரணம் தொடர்பில் மர்மம் நீடிக்கிறது. பொலிஸின்  150ஆவது ஆண்டுவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியா இந்த மரணம்?

நல்லாட்சி அரசை உருவாக்க பாடுப்பட்ட மக்களை அரசு இவ்வாறுதான் கவனிக்குமா? ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையாற்றுகின்ற போது நாட்டில் நடக்கும் இத்தகைய அநீதிகளுக்கு யார் பொறுப்பேற்கப்போகின்றார்கள்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் குறித்த இளைஞனின் மரணத்துக்கு கூறும் பதில் என்ன?

இந்த மரணத்துக்கு மலையக அரசியல் தலைவர்கள் நீதியைப்பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை. அவர்கள் அரசின் விசுவாசிகளாகவே அமைதி காக்கின்றனர். நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் வாய்திறக்காதவர்களா அரசாங்கத்திடமிருந்து நீதியைப்பெற்றுக் கொடுக்க போகின்றார்கள்?

மலையக சமூக ஆய்வு மையம் நடராஜா ரவிச்சந்திரனின் மரணத்திற்கு கண்டனத்தை தெரிவிப்பதோடு குறித்த இளைஞனின் குடும்பத்துக்கும் அப்பகுதி மக்களுக்கும் பாதூகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றது.

ஜனநாயக நாட்டில் நடக்கும் காட்டு நீதியை மக்கள் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை. மக்களை பாதுகாக்கவேண்டிய பொலிஸ் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஒருவர் தூக்கிட்டு சாகும்வரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிருந்ததா? இதுதான் பாதுகாப்பா? பொலிஸாரால் தனது அண்ணன் தாக்கப்பட்டதாக கூறும் தம்பியின் கதறல் மரணம் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

சிவில் அமைப்பாகவும் மலையக சமூக ஆய்வு மையம் என்ற அடிப்படையிலும் இளைஞனின் மரணத்துக்கு வண்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். குறித்த மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை ஓய்ந்துவிடப்போவதில்லை. போராட்டமும் கண்கானிப்புக்களும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com