புளத்கோபிட்டிய களுபான தோட்டத்திற்கு புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

அண்மையில் நாடெங்கிலும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக புளத்கோபிட்டிய களுபான பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்புக்கமைய (09-06-2016) அன்று புளத்கோபிட்டிய களுபான தோட்டத்தில் இடம்பெற்றது.

கடந்த மாதம் 17ம் திகதியன்று இரவு இடமபெற்ற மண்சரிவு காரணமாக 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆதலால் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் அவ்விடங்களிலிருந்து வேறு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 20ம் திகதி புளத்கோபிட்டிய களுபான தோட்டத்திற்கு விஜயம் செய்து இவ் மக்களை சந்தித்த மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகளை  நிர்மாணித்து தருவதாக உறுதியளித்தார். இதற்கமைய 7 பேர்ச் காணிகளில் ஒவ்வொன்றும் 550 சதுரஅடி அளவுள்ள 100 தனி வீடுகள் அமைபபதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு (09-06-2016) அன்று இடம்பெற்றது.

01 02 03 04

இந்நிகழ்வில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேரா, மத்திய மாகாணசபை உறுப்பினர் சரஸ்வதி சிவகுரு, பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் வீ. புத்திரசிகாமணி, கௌரவ அமைச்சரின் ஆலோசகர் எம். வாமதேவன், கௌரவ அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி பழனி விஜயகுமார் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் கேகாலை மாவட்ட அமைப்பாளர்களாகிய எஸ். சோமசுந்தரம், எஸ். மந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com