சற்று முன்
Home / செய்திகள் / புலிக்கொடியை எரித்து பேரினவாதிகள் தெற்கில் வெறியாட்டம்

புலிக்கொடியை எரித்து பேரினவாதிகள் தெற்கில் வெறியாட்டம்

வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெற்ற நிலையில் மகிந்த ஆதரவு கும்பல் ஒன்று தமிழ் இன குரோதப் பதிவை முகநூலில் பதிவேற்றி இனவாதத்தை தூண்டும் செயலில் ஈடுபட்டுள்ளது.

மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் முகநூல் பதிவுகளை வெளியிடும் விகாரமாதேவி பரப்புர என்ற முகநூல் கணக்கின் ஊடாக தமிழ் மக்களைச் சீண்டும் வகையில் ஒளிப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழீழ தாயக மக்களால் போற்றப்படும் புலிக்கொடியை அவமதித்து அதனை எரிக்கும் காட்சிகளை அந்தக் கும்பல் நேற்று (18) காலை பதிவேற்றியுள்ளது.

அதனை சிங்கள இனவாதிகள் 13 ஆயிரம் பேர்வரை பகிர்ந்துள்ளனர். இன வன்முறைகளைத் தூண்டும் பதிவுகளுக்கு தடை விதிக்கப்படும் என அரசும் முகநூல் நிறுவனமும் உறுதியளித்த போதும் இந்தப் பதிவிக்கு அத்தகைய எதனையும் இரு தரப்பினரும் செய்யவில்லை.

அத்துடன்,  தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைவுகூரும் போது அவர்களை சீண்டவேண்டும் என்ற நோக்குடனேயே இனவாதக் கும்பல்கள் இத்தகைய பதிவுகளை போட்டுள்ளன.

(அவர்களின் நோக்கத்துக்கு துணை நிற்பதாக அமையும் என்பதால் அது தொடர்பான ஒளிப்படங்களைத் தவிர்க்கின்றோம்)

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com