சற்று முன்
Home / செய்திகள் / புலிகள் மக்களை கொன்றார்கள்; அவர்கள் அழிக்கப்பட்ட நாளே எனக்கு முக்கியமான நாள்

புலிகள் மக்களை கொன்றார்கள்; அவர்கள் அழிக்கப்பட்ட நாளே எனக்கு முக்கியமான நாள்

2009இல் யுத்தம் முடிவிற்கு வந்த, விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நாளே எனது வாழ்வில் முக்கியமான நாள். சமாதான பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகளிற்கு நல்ல வாய்ப்புக்கள் வந்தன. ஆனால் அவர்கள் மக்களை கொன்றார்கள்.

இப்படி தெரிவித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்.

கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவான வியத்கம அமைப்பின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இப்படி தெரிவித்தார்.

கிரிக்கெட் வீரர்களோ, ஏனைய துறைசார் வல்லனர்களோ நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது, இலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர், ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சில விடயங்களை சாதித்த, மக்களை பாதுகாக்ககூடிய ஒருவரிற்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com