புலிகளோடு இயங்கிய தமிழ் கூட்டமைப்பு குற்றவாளிகள் இன்று யுத்தக் குற்றம் பற்றிக் கதைக்கிறார்கள் -கோத்தபாய

விடுதலைப் புலிகள் அமைப்புடன் அன்று  இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றவாளிகள் இன்று யுத்தக் குற்றங்கள் குறித்தும் மனித உரிமைகள் குறித்தும் குற்றச்சாட்டுக்களை எழுப்புவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அன்று யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இன்று மனித உரிமைகளில் சம்பியன்களாக உள்ளதாகவும் அவர்  கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சரது பொறுப்பு தனது நாடு தவறிழைக்கவில்லை என காட்டுவதே தவிர, தவறு என்று உலகத்திற்கு கூறுவது அல்ல எனவும் கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com