புலிகளை வைத்துப் பிழைப்பு நடத்தாதே – சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பிரதேசவாதத்தைத் தூண்டிவிடும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்து அவருக்கு எதிராக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (19) காலை 10 மணியளவில் கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகாமையில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பூநகரி, பளை,கண்டாவளை கரைச்சி பிரதேசங்களை சேர்ந்து பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
போலித்தேசியம் பேசாதே, புலிகளை வைத்துப் பிழைக்காதே!, சமூக வேறுபாடுகளை உருவாக்காதே, சமூக உறவைக் குலைக்காதே!, சாத்தானின் கைகளில் நீதியா
சிறிதரனின் கைகளில் நிர்வாகமா?, வாக்கு வேட்டைக்குத் தமிழ்த் தேசியமா
வயிற்றுப் பிழைப்புக்கு ————–? போன்ற வாசங்கங் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com