சற்று முன்
Home / சினிமா / புலிகளைத் தத்தெடுத்த விஜய் சேதுபதி

புலிகளைத் தத்தெடுத்த விஜய் சேதுபதி

தன்னை பார்க்க வரும் ரசிகர்களை தவிர்க்காமல், அவர்களை அணைத்து முத்தம்கொடுத்து அன்பை செலுத்துபவர் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலுள்ள இரண்டு வெள்ளை புலிகளை தத்து எடுத்து, மனிதர்களிடம் மட்டும் அன்பு செலுத்துபவன் அல்ல விலங்குகளிடமும் அன்பு செலுத்துபவன் என்று இச்சம்பவத்தின் மூலம் காட்டியுள்ளார். மேலும் பூங்காவிலுள்ள விலங்குகளை பராமறிப்பதற்காக 5 லட்சம் ரூபாய் காசோலையையும் கொடுத்திருக்கிறார்.

ஆதித்யா என்னும் ஐந்து வயது ஆண் வெள்ளை புலியையும், ஆர்தி என்னும் நான்கரை வயது பெண் வெள்ளை புலியையும் இவர் தத்தெடுத்திருக்கிறார். மக்களை உயிரியல் பூங்காவிற்கு வரவைக்கவே இவ்வாறு செய்கிறேன் என்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “இங்கு வருவதன் மூலம் நகரத்தில் இருந்தும் காட்டுக்குள் செல்லும் அனுபவம் எனக்கு ஏற்படுகிறது. இந்திய வனங்களில் இல்லாத விலங்குகள் கூட இந்த உயிரியல் பூங்காவில் உள்ளது. மக்கள் இங்கு வருவதற்கு காரணம் விலங்குகளின் அப்பாவிதனத்தை ரசிப்பதற்கு. இங்கு வருவது சந்தோசத்தையும், நமக்கு பயனையும் அளிக்கிறது. அனைவரும் 5லட்சம் பணம் கொடுங்கள் என்று நான் சொல்லவில்லை, தங்களால் முடிந்த ஒரு சிறு தொகையை கொடுங்கள் அதுபோதும். கடல்கறைக்கும், காட்சியறைக்கும் செல்பவர்கள் இந்த உயிரியல் பூங்காவிற்கும் வந்து செல்லுங்கள்” என்றார்.

விஜய் சேதுபதி சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படம் தற்போது ஷூட்டிங் முடிவடைந்துள்ளது. ஸ்க்டெச் இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் தற்போது விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் திருநங்கையாக நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் இந்த மாதம் 29 ஆம் திகதி வெளியாகிறது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ – இளையராஜா இசையமைக்கிறார்

5 மொழிகளில் உருவாகும் ஸ்ரேயாவின் ‘கமனம்’ படத்திற்கு, இளையராஜா இசையமைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில், ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com