புலிகளின் முன்னாள் தளபதிகள் ராம் – நகுலன் கைது

nagulan-ram-photoவிடுதலைப் புலிகள் அமைப்பில், முன்னர் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவராக இருந்த  ராம் (எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன்) பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் (24) கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்டனி படைப்பிரிவின் சிறப்பு தளபதியாக இருந்த  நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவர் இன்று (26)  நீர்வேலி தெற்கு பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த நகுலன், இறுதிக்கட்டப் போரின் போது, அம்பாறை மாவட்டத்தில், புலிகளின் தளபதிகளில் ஒருவரான ராமுடன் இணைந்து செயற்பட்டவர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், இவர்கள்,அரச படையினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர்  2013ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com