புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி மரணம்

(18.09.2015) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்று அழைக்கப்படும் சிவகாமி சிவசுப்பிரமணியம் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1991இல் இணைந்து கொண்ட தமிழினி தனது கவனிக்கத் தக்க  பங்களிப்புக்களின் ஊடாக மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளரானார். 

2009 இறுதிப்போரின் பின்னர் முள்வேலி முகாமில் வைத்து கைது செய்யப்பட்ட தமிழினி 2013ஆம் ஆண்டில் வவுனியாவில் வைத்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டதாக விடுவிக்கப்பட்டார். 

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அவருக்கு புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் கொழும்பில் சிகிச்சை பெற்றுள்ளார். 

திடீரென அவரது உடல் நிலமை மோசமாகியதையடுத்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சாவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது உடல் கிளிநொச்சி பரந்தனில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com