சற்று முன்
Home / செய்திகள் / புலமைப்பரிசில் – வடக்கில் 18 ஆயிரம் மாணவர்களில் 2 ஆயிரம் பேரே வெட்டுப்புள்ளியை தாண்டியவர்கள் !!

புலமைப்பரிசில் – வடக்கில் 18 ஆயிரம் மாணவர்களில் 2 ஆயிரம் பேரே வெட்டுப்புள்ளியை தாண்டியவர்கள் !!

2018 தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேற்றின் அடிப்படையில் வட மாகாணத்தில் 886 பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியபோதும் 420 பாடசாலைகளில் இருந்து ஒரு மாணவன் ஏனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை என்னும் ஓர் பாரிய உண்மையினையும் வெளிக்கொணர்ந்துள்ளது.

இலங்கையில் 99 கல்வி வலயங்கள் உள்ளன. இதில் 12 கல்வி வலயங்களை மட்டும் கொண்ட வட மாகாணத்தில் மொத்தமாக 983 பாடசாலைகள் இயங்குகின்றன. இதில் ஆரம்ப்ப் பிரிவுகளை உடைய 886 பாடசாலைகளில் 2018 ம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றது. இதன் அடிப்படையில் குறித்த பாடசாலைகளில் 18 ஆயிரத்து 811 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். இவ்வாறு தோற்றிய மாணவர்களில் 2 ஆயிரத்து 240 மாணவர்களே வடக்கில் வெட்டுப் புள்ளியை தாண்டியுள்ளனர்.

இவ்வாறு வெட்டுப் புள்ளியை தாண்டிய 2 ஆயிரத்து 240 மாணவர்களும் 420 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் என்பதன் அடிப்படையில் வடக்கு மாகாணத்தின் 420 பாடசாலைகளில் இருந்து ஒரு மாணவன்கூட வெட்டுப் புள்ளியைத் தாண்டவில்லை.

குறித்த பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் 92 பாடசாலையை சேர்ந்த 2 ஆயிரத்து 789 மாணவர்கள் தோற்றிய நிலையில் 45 பாடசாலைகளைச் சேர்ந்த 537 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டிய நிலையில் 47 பாடசாலைகளில் இருந்து எந்தவொரு மாணவனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை . இவ்வாறே வலிகாம்ம் கல்வி வலயத்தில் 124 பாடசாலையை சேர்ந்த 2 ஆயிரத்து 606 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியபோதிலும் 59 பாடசாலைகளைச் சேர்ந்த 309 மாணவர்களே வெட்டுப்புள்ளியைத் தாண்டியுள்ளனர். தீவக கல்வி வலயத்தில் இருந்து 54 பாடசாலையை சேர்ந்த 612 மாணவர்கள் பரீட்சை எழுதிய நிலையில் 21 பாடசாலையின் 35 மாணவர்களும் , வடமராட்சி கல்வி வலயத்தில் இருந்து 73 பாடசாலையின் 1505 மாணவர்கள் பரீட்சையில் தோற்றிய நிலையில் 47 பாடசாலைகளைச் சேர்ந்த 206 மாணவர்கள் மட்டுமே வெட்டுப் புள்ளியினைத் தாண்டியுள்ளனர்.

இதேபோன்று தென்மராட்சி கல்வி வலயத்தினைப் பொறுத்தமட்டில் இங்கு 54 பாடசாலைகளின் 876 சிறார்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றினர். இங்கும் 29 பாடசாலைகளைச் சேர்ந்த 101 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை தாண்டியுள்ளனர். என்கின்கின்றது கல்வித்திணைக்களம் . இதன் அடிப்படையில் இங்கும் 25 பாடசாலைகளில் எந்த மாணவனும் வெட்டுப்புள்ளியை தாண்டவில்லை.
அதேபோன்று கிளிநொச்சி மாவட்டமானது ஒரேயொரு வலயத்தினைக் கொண்டது. இங்குள்ள 104 பாடசாலைகளில் ஆரம்ப நிலை உள்ள 94 பாடசாலைகளில் இருந்து 2 ஆயிரத்து 752 மாணவர்கள் பரீட்சை எழுதிய நிலையில் 68 பாடசாலைகளைச் சேர்ந்த 306 மாணவர்கள் வெட்டுப் புள்ளியை தாண்டிய உள்ளனர். இருப்பினும் 26 பாடசாலை மாணவர்கள் வெட்டுப் புள்ளியை தாண்ட முடியவில்லை.

முல்லைத்தீவு மாவட்டத்தின் இரு கல்வி வலயங்களான முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 55 பாடசாலையை சேர்ந்த 1589 மாணவர்கள் பரீட்சையில் தோற்றிய நிலையில் 33 பாடசாலைகளைச் சேர்ந்த 218 மாணவர்கள் வெட்டுப் புள்ளியினைத் தாண்டியுள்ளனர். இதேபோன்று துணுக்காய் கல்வி வலயத்தில் உள்ள 61 பாடசாலைகளில் 54 பாடசாலைகளைச் சேர்ந்த 829 மாணவர்கள் தோற்றிய நிலையில் 14 பாடசாலைகளின் 34 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தினைப் பொறுத்த மட்டில் 2018ம் ஆண்டில் வடக கில் மிகவும் கீழ் நிலையில் உள்ள மாவட்டமாகவே உள்ளது. இங்கு மடுக் கல்வி வலயத்தில் உள்ள 52 பாடசாலைகளில் 39 பாடசாலையை சேர்ந்த 493 மாணவர்களே பரீட்சையில் தோற்றிய நிலையில் 14 பாடசாலைகளின் 27 மாணவர்களும். மன்னார் கல்வி வலயத்தில் உள்ள 88 பாடசாலைகளில் 83 பாடசாலைகளைச் சேர்ந்த 1809 மாணவர்களில் 26 பாடசாலைகளின் 103 மாணவர்கள் வெட்டுப் புள்ளியைத் தாண்டியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்குக் கல்வி வலயத்தில் உள்ள 96 பாடசாலைகளில் 79 பாடசாலையின் 2 ஆயிரத்து 296 மாணவர்கள் தோற்றிய நிலையில் 45 பாடசாலைகளின் 327 மாணவர்களும். வவுனியா வடக்கு கல்வி வலய 76 பாடசாலைகளில் 63 பாடசாலையின் 655 மாணவர்களில் 19 பாடசாலைகளின் 47 மாணவர்களும் வெட்டுப் புள்ளியைத் தாண்டியுள்ளனர்.

இவற்றின் அடிப்படையிலேயே வட மாகாணத்தில் 886 பாடசாலையை சேர்ந்த 18 ஆயிரத்து 811 பேரில் 420 பாடசாலைகளின் 2 ஆயிரத்து 240 மாணவர்கள் வெட்டுப் புள்ளியினைத் தாண்ட 458 பாடசாலைகளில் ஒருவரேனும் வெட்டுப் புள்ளியை தாண்டவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com