புத்தாண்டில் குடி போதையில் வாகனம் செலுத்திய 1,546 பேர் கைது

புத்தாண்டு காலப்பகுதியான கடந்த 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 51 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் மொத்தமாக 49 பாரிய விபத்துக்கள் பதிவானதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இந்த விபத்துக்களிலேயே இந்த 51 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்தார். புத்தாண்டு விடுமுறையைப் பயன்படுத்தி பல்வேறு சுற்றுப் பயணங்களை முன்னெடுத்தவர்களே பெரும்பாலும் இத்தகைய விபத்துக்களில் சிக்கியுள்ளதாகவும், அதிக வேகம், கவனயீனம் போன்றனவே பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே கடந்த 10 ஆம் திகதி முதல், நேற்று(17) காலை ஆறு மணி வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பொலிஸார் முன்னெடுத்த குடி போதையில் வாகனம் செலுத்திய சாரதிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் 1546 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.

மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் இது தொடர்பில் அதிகமாக கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் 864 மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கடுத்தபடியாக 475 முச்சக்கர வண்டி சாரதிகள் குடிபோதையில் வாகனம் செலுத்திய போது கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com