புதையல் தோண்டிய ஐவர் கைது

வெலிமடை மிரஹாவத்த வேகொட பிரதேசத்தில் புதையல் தோண்டிய ஐவரை 11.08.2016 அன்று மாலை பண்டாரவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பண்டாரவளை பொலிஸ் விசேட குற்றப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடிப்படையாகக் கொண்டே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது புதையல் தோண்டியதன் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அதற்கென உபயோகப்படுத்திய ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கற்குழியொன்றை நடாத்தி செல்லும் நோக்கிலேயே இவர்கள் இவ்விடத்தில் புதையல் தோண்டும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.20160811_121134 20160811_173740 20160811_173913 20160811_173940

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com