புதுக்கட்சி தொடங்கினார் விஜயகாந் – தமிழக முதல்வரை யாழ்ப்பாணம் வருமாறு அழைப்பு

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எனும் பெயரில் புதிய அரசியல் கட்சிஒன்றை ஆரம்பித்துள்ள மதிமுகராஜா விஜயகாந் தாம் புதிய அரசியல் அத்தியாயம் ஒன்றினைத் தொடங்கவிருப்பதாகவும் தமிழக முதல்வரை யாழ்ப்பாணத்திற்கு வருமாறு நேரில் சென்று அழைப்புவிட விருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமைத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகசந்திப்பில் மேலும் தெரிவித்த அவர்,

கடந்த 26 ஆம் திகதி தாவடியிலுள்ள தமது புதிய கட்சி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதாகவும் தன்போது அனைவரது வேண்டுகோளின் பேரில் தான் கட்சியின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்த அவர் அடுத்தவாரம் தமிழகம் செல்லும் தமது கட்சி முக்கியஸ்தர்கள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்ச்செல்வம், அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களை சந்திக்கவுள்ளதாகவும் அதன்போது தமிழக முதலமைச்சர் மற்றும் பொதுச்செயலாளரை யாழ்ப்பாணம் வருகைதந்து இங்குள்ள தமிழர் நிலைமைகளை நேரில் பார்வையிட அழைப்புவிடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழகத்தில் தடுப்பு முகாம்களிலுள்ள இலங்கை அகதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com