சற்று முன்
Home / செய்திகள் / புதிய பிரேரணை – பிரிட்டன் அரசாங்கத்திற்கு நேரில் சென்று நன்றி சொன்ன சுமந்திரன்

புதிய பிரேரணை – பிரிட்டன் அரசாங்கத்திற்கு நேரில் சென்று நன்றி சொன்ன சுமந்திரன்

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைகள் சபையின் தற்போதைய 40ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாகப் புதியதொரு கால நீடிப்புப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்கு பிரிட்டன் எடுத்த முயற்சிகளுக்காக அந்த நாட்டுக்கு நன்றி தெரிவித்திருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேரடியாக லண்டனில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரியைச் சந்தித்து கூட்டமைப்பின் நன்றியைத் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் லண்டன் பிரிவுத் தலைவர் ஆர்.டி.இரத்தினசிங்கம், வண.பிதா எஸ்.ஜே.இம்மானுவேல் ஆகியோருடன் சென்ற சுமந்திரன் எம்.பி. அங்கு பிரிட்டனின் தெற்காசியப் பிரிவுத் திணைக்களத்தின் தலைமை அதிகாரியான பேர்குஸ் ஒல்டை கடந்த வெள்ளியன்று சந்தித்தார்.

அச்சமயமே மேற்படி புதிய பிரேரணையைக் கொண்டு வந்தமைக்காகக் கூட்டமைப்பின் நன்றியைப் பிரிட்டனுக்குத் தெரியப்படுதினார் சுமந்திரன் எம்.பி. ஏற்கனவே இலங்கை தொடர்பாக 2015இல் இலங்கையும் சேர்ந்து ஜெனிவாவில் நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களை இலங்கை நிறைவேற்றுவதற்குத் திட்டவட்டமான காலவரையறைகளை விதிக்க வேண்டும் எனவும், புதிய பிரேரணையை இலங்கை நீர்த்துப் போக வைக்க இடமளிக்கக் கூடாது எனவும் இந்த மூவர் குழு பிரிட்டன் தரப்பை வலியுறுத்தியது எனவும் அறியவந்தது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com