சற்று முன்
Home / செய்திகள் / புதிய தமிழ்ப் புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளாக தோற்றம்பெற்ற நாள் – இன்று

புதிய தமிழ்ப் புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளாக தோற்றம்பெற்ற நாள் – இன்று

 

புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று 05.05.1976 அன்று  பெயர் சூட்டப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் (Liberation Tigers of Tamil Eelam, LTTE) சுருக்கமாக விடுதலைப் புலிகள் அல்லது த.வி.பு என்பது இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் 05.05.1976 இல் விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டது.
இது இலங்கையில் வடக்கு-கிழக்கில் தமிழீழம் என்ற பெயரில் தமிழருக்கான தாயகத்தை அமைக்கும் உறுதியுடன் 1976 களில் இருந்து 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாள் வரை தொடர்ந்து போராடியது.

இதன் மூலம் ஏற்பட்ட ஈழப் போர் இலங்கை ஆயுதப் படைகள் மூலம் 2009 இல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து 2009 மே 18 ஆம் நாள் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்டது.

 

———————————————-

1260 – குப்லாய் கான் மங்கோலியப் பேரரசராக முடிசூடினார்.
1494 – கொலம்பசு ஜமேக்காவில் தரையிறங்கி அதனை எசுப்பானியாவுக்காக உரிமை கோரினார்.
1762 – உருசியாவும் புரூசியாவும் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் அமைதி உடன்பாட்டை எட்டின.
1821 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் நாடு கடந்த நிலையில் தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலில் செயிண்ட் எலனா தீவில் இறந்தார்.
1860 – கரிபால்டி ஆயிரக்கணக்கானோருடன் செனோவாவில் இருந்து சிசிலியைக் கைப்பற்றப் புறப்பட்டார். இத்தாலி இராச்சியம் உருவானது.
1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்:கூட்டமைப்பு அரசு கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
1912 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பத்திரிகை பிராவ்தா சென் பீட்டர்ஸ்பேர்க் இல் இருந்து முதன் முதலாக வெளியிடப்பட்டது.
1925 – தென்னாப்பிரிக்காவில் ஆபிரிக்கான மொழி அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டது.
1936 – எதியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரை இத்தாலியப் படைகள் கைப்பற்றினர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: நாடு கடந்த நிலையில் நோர்வேயின் அரசு லண்டனில் அமைக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: நார்வே போர்த்தொடர்: நார்வே படைக்ள் எக்ரா, வின்யசுவிங்கன் சண்டைகளில் செருமனியப் படைகளிடம் சரணடைந்தன.
1941 – எதியோப்பியாவின் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி அடிஸ் அபாபா திரும்பினார். இந்நாள் அங்கு விடுதலை நாளாகக் கொண்டாடப்படுகிறது.
1944 – மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுதலையானார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஆக்கிரமிப்பை எதிர்த்து பிராகா நகரில் கிளர்ச்சி ஆரம்பித்தது.
1946 – போர் குற்றம், மற்றும் மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக 28 சப்பானிய இராணுவ, அரச அதிகாரிகள் மீது பன்னாட்டு விசாரணை டோக்கியோவில் ஆரம்பமானது.
1950 – தாய்லாந்தின் ஒன்பதாவது ராமா மன்னராக பூமிபால் அதுல்யாதெச் முடி சூடினார்.
1955 – மேற்கு செருமனி முழுமையான விடுதலை அடைந்தது.
1961 – மேர்க்குரி திட்டம்: அலன் ஷெப்பர்ட் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது மனிதரும் முதலாவது அமெரிக்கரும் ஆனார்.
1972 – இத்தாலிய வானூர்தி சிசிலியில் லோங்கா மலையில் மோதி வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 115 பேரும் உயிரிழந்தனர்.
1976 – புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயருடனிருந்த இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது.
1980 – ஆறு நாட்களாக தீவிரவாதிகளினால் முற்றுகையிடப்பட்டிருந்த லண்டனின் ஈரானியத் தூதரகத்தின் மீது பிரித்தானியாவின் சிறப்பு வான்சேவை தாக்குதலை ஆரம்பித்தது.
1981 – அயர்லாந்து புரட்சியாளர் பொபி சான்ட்ஸ் சிறையில் 66 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம் இருந்து தனது 27வது அகவையில் காலமானார்.
1992 – கோர்சிகாவில் நடைபெற்ற கால்பந்துப் போட்டி ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர், 2,300 பேர் காயமடைந்தனர்.
2006 – சூடான் அரசுக்கும் சூடான் விடுதலை இராணுவத்துக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
2007 – கென்யாவின் விமானம் ஒன்று கமரூனில் வீழ்ந்ததில் 15 இந்தியர்கள் உட்பட 118 பேர் கொல்லப்பட்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com