புதிய கூட்டணி: அறிவிப்புக்கு தயாராகிறார் வைகோ!

சென்னை: (பதிவு செய்த நாள் – ஐப்பசி 03, 2015, 10.00 பி.ப) ம.தி.மு.க.வுடன், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 4 கட்சிகளும் இணைந்து புதிய கூட்டணி உருவாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் திங்கட்கிழமையன்று வைகோ அறிவிக்கிறார்.
தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரத்திற்கு தயாராகி விட்டார் வைகோ. இன்று காஞ்சிபுரம் அண்ணா இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய வைகோ, “மக்கள் சந்திப்பு மறுமலர்ச்சி பயணத்தை தொடங்குவதற்கு முன்பு, அறிஞர் அண்ணா பிறந்து வளர்ந்த இந்த இல்லத்தில், அண்ணாவின் வாழ்த்துக்களை பெறுவதற்காக இங்கே வந்திருக்கிறேன். தான் ஆட்சி புரிந்த காலத்தில் வருமானத்திற்காக மதுவை கொண்டுவர அனுமதிக்கமாட்டேன்; தாய்மார்களின் கண்ணீருக்கு காரணமாக இருக்க மாட்டேன் என்று சொன்னார் அண்ணா.
அந்த கனவை சிதைத்து, கருணாநிதி மதுவை கொண்டு வந்தார். எம்.ஜி.ஆரும் அதையே செய்தார். அதற்கு பின் வந்த ஜெயலலிதாவும்  வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறந்தார். லட்சோபலட்சம் தொண்டர்களும், தலைவர்களும் கண்ணீர் சிந்தி, அண்ணா வளர்த்த இந்த இயக்கத்தை இரண்டு திராவிட கட்சிகளும் சீரழித்துவிட்டன. தி.மு.க வரவேண்டாம் என்று அ.தி.மு.க.விற்கு வாக்களித்தார்கள். அ.தி.மு.க. வரக்கூடாது என்று தி.மு.க.விற்கு வாக்களித்தார்கள். மதுவுக்கு எதிராக போராடக் கூடிய தகுதி எங்களுக்கே உள்ளது.
தமிழகத்தில் இப்போது நல்ல கூட்டணி உருவாகி இருக்கின்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்துள்ள மக்கள் நல கூட்டியக்கம், மக்கள் நல கூட்டணியாக நாளை மறுநாள் திருவாரூரில் நடக்கக் கூடிய கூட்டத்தில் அறிவிக்கப்போகிறோம். சாதிமத பேதங்களுக்கு அப்பாற்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக, லஞ்சம் ஊழல என்ற சொல்லுக்கு இடமில்லாத ஆட்சியை கொடுக்க நாங்கள் சபதம் பூண்டிருக்கின்றோம்.

ஜெயலலிதா வழக்கில் நீதிபதி குன்ஹா,  ஜெயலலிதாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தார். அதே கருத்தை நிறைவேற்றும் விதத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வினர் செய்த ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வோம்” என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com