புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என்று மஹாநாயக்கர் கூறவில்லை – அந்த செய்தி பொய் என்கிறார் ரணில்

மல்வத்தை மஹாநாயக்கர் நாட்டில் இல்லாத வேளையில், புதிய அரசியல் யாப்பு தேவையில்லை என்று அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியிட்டமை பிழையானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் யாப்பு வழிநடத்தற்கு குழுவின் இடைக்கால அறிக்கையை, இலங்கை ஊடக கல்லூரி உள்ளிட்ட 3 நிறுவனங்கள் பகுப்பாய்வு செய்து தயாரித்த அறிக்கை நேற்று பிரதமரிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

“அஸ்கிரிய மற்றும் மஹாநாயக்க தேரர்கள் ஒன்று கூடி, தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றோ, யாப்பின் திருத்தமோ தேவையில்லை என்று தீர்மானித்ததாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை பல ஊடகங்கள் பிரதான தலைப்புச் செய்தியாக வெளியிட்டு மல்வத்தை மஹாநாயக்கரின் படத்தையும் பிரசுரித்திருந்தன. ஆனால் அவர் நாட்டிலேயே இல்லை. இன்று காலையும் நான் அவருடன் கலந்துரையாடினேன். அவர் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு மஹாநாயக்க தேரர் கலந்து கொள்ளாத ஒரு கூட்டத்தில் அவர் புதிய அரசியல் யாப்பு தயாரிப்புக்கு எதிராக தீர்மானம் மேற்கொண்டதாக செய்தி வெளியிட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது. அதேநேரம் இன்னும் அரசியல் யாப்பு தயாரிக்கப்படவில்லை. அதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மாத்திரமே இடம்பெற்றுள்ளன” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com