புதிய அரசியல் யாப்பிற்கு ஆலோசனை கேட்கிறது அரசு

அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்கும் நடவடிக்கை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதல் கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. 

அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்காக பொது மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன்படி இந்த வேலைதிட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது. 

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 22ம் திகதி வரை கொழும்பு, கொம்பனிவீதியில் அமைந்துள்ள விசும்பாயவில் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்கள் கருத்துக்களை உள்வாங்கு நடவடிக்கை இடம்பெறும் என்று அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்கள் கருத்துக்கயை உள்வாங்கும் குழு தெரிவித்துள்ளது. 

காலை 09.30 மணிமுதல் 4.30 மணிவரை பொது மக்கள் ஆலோசனை வழங்க முடியும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது. 

இதில் அனைத்து பொது மக்களும் இணைந்து கொள்ளுமாறு அந்தக் குழு பொதுமக்களிடம் கோரியுள்ளது. 

இது தொடர்பாக 0112 437 676 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் 0112 328 780 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் பொது மக்கள் ஆலோசனை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com