புதிய அரசியலமைப்பு – மன்னாரில் கருத்தறியும் நடவடிக்கை

புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்தினை அறியும் ஆலோசனைக்குழு நேற்று முந்தினம் (10) புதன்கிழமை அதன் பதிவுகளை மன்னார் மாவட்ட செயலகத்தில் மேற்கொண்டது.
லால் விஜயநாயக்க தலைமையில் பதிவுகளை மேற்கொண்ட குழுவில் எஸ்.தவராசா மற்றும் விஜயசந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டு பதிவுகளை மேற்கொண்டனர். தமிழ் மக்களின் நிரந்தரத் தீர்வு தொடர்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்க்தில் சேர்க்கப்பட வேண்டிய ஆலோசனைகள் வழங்குவதற்காக மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்து வந்திருந்த மக்கள் தமது கருத்துக்களை குழு முன்னிலையில் பதிவு செய்தனர்.

நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ். தேசபிரிய, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்டான்லி டி மெல், உதவி மாவட்ட செயலர் பவாகரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds