புதிய அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் நடவடிக்கை யாழில் ஆரம்பம்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் யாழ்ப்பாண மக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கைகள்  யாழ் மாவட்டச் செயலகத்தில் இன்று (15.02.2016) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இது, தொடர்பில் வடக்கு மக்களின் கருத்துக்களை பெற வேண்டியது முக்கியமானது என, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை வடக்கு மக்களின் கருத்துக்களை பெரும் நோக்கில் அம் மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com