புதிய அரசியலமைப்பு குறித்த விவாதத்தை பிற்போடும் அரசாங்கம் – கூட்டமைப்பின் நெருக்குதல் காரணமா?

புதிய அரசியலமைப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை பிற்போடுவதற்கு அரசியலமைப்பு சபையின் செயற்பாட்டு குழு தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.குறித்த விவாதம் 09,10,11ம் திகதிகளில் இடம்பெற இருந்தது.

புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட உபகுழுக்களின் அறிக்கைகளை ஒன்றிணைத்து ஒரு அறிக்கை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தத போதிலும், அது இதுவரை தயாரிக்கப்படாமையின் காரணமாகவே விவாதம் பிற்போடப்பட்டுமைக்கான காரணம் என அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை காலை 09.30 மணிக்கு பாராளுமன்றம் கூடிய பின்னர், சபாநாயகர் கருஜயசூரியவினால், குறித்த விவாதம் பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பாக சபைக்கு அறிவிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகளிடையே அதிருப்தி நிலவிவரும் சூழலில் குறித்த விவாத்தில் தமது நிலைப்பாடு என்னவாக இருக்கவேண்டும் என்பது தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 7,8,9 ஆம் திகதிகளில் கொழும்பில் கூடி ஆராயவுள்ளதாக அறிவித்திருந்து. இதன் பின்னணியில் அரசாங்கம் விவாதத்தை ஒத்திவைக்கக்கூடும் என கொழும்பு அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com