புதிய அதிபர்களுக்கு மார்ச்சில் நியமனம்!

புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அதிபர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதம் நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இலங்கை அதிபர் சேவை III ஆம் வகுப்புக்கான போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் 4,076 பேர் நிரந்தர அதிபர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில் இவர்ளுக்கான நியமனக் கடிதங்களை மார்ச் மாதம் முடிவதற்கு முன்னர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் குறித்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு இறுதியாக அதிபர் சேவையின் III வகுப்புக்கு தெரிவு செய்வதற்கன போட்டிப் பரீட்சை நடைபெற்றிருந்தது. அதன் பின்னர் சேவை அடிப்படையிலேயே பதவி வெற்றிடம் பூரணப்படுத்தப்பட்டது. அதன்படி 5600 பதவி வெற்றிடங்கள் நிரப்புவதற்கு நடத்தப்பட்ட போட்டிப்பரீட்சைக்கு 19,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் தெரிவு செய்யபப்பட்ட 4,076 பேருக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த பல வருட காலமாக பாடசாலைகளில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கடமை நிறைவேற்று அதிபர்களாக கடமையாற்றிய பலர் இதனால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் இவர்களின் நன்மை கருதி மாற்றுத்திட்டமொன்றினை ஏற்படுத்துமாறும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com