புசல்லாவ பொலிஸ் நிலைத்தில் இளைஞன் மர்ம மரணம் – பொலிஸ் மா அதிபரின் வாக்குறுதிக்கு அமைய ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

suspect-commit-suicide-in-jail_0குற்றச் செயல் ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு தாக்கல் செய்யபட்டு நீதிமன்றுக்கு அழைக்கபட்டிருந்த  இளைஞன் ஒருவர் அவ்வழக்கிற்கு குறித்த நேரத்திற்கு சமூகம் தராததால், நீதிமன்றினால் பிடி ஆணை பிறப்பிக்கபட்டிருந்தது.

அதன் படி, நேற்று முன்தினம் (17) இரவு 7.30 மணியளவில் புசல்லாவ பொலிஸாரினால் புசல்லாவ நகரத்தில் வைத்து பொலிஸாரினால் அவர் கைது செய்யபட்டுள்ளார்.

கைது செய்யபட்ட, நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் வரை புசல்லாவ பொலிஸ் பாதுகாப்பில் வைத்திருந்த வேளையில் சந்தேக நபர் தனது ரீசேட்டை பயன்படுத்தி சிறை கதவு கம்பின் ழூலம் தூக்கில் தொங்கியுள்ளதாக புசல்லாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞனது மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள   சுமார் 1000 தோட்ட தொழிலாளர்கள் கண்டி – நுவரெலியா பிரதான பாதையை மறித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சினைக்கு காரணமாக இருந்த பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறும், நடைபெற்றது தற்கொலை அல்ல கொலை அதற்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காததால் போராட்டம் நீடித்தது. இதனையடுத்து, அமைச்சர் பழனி திகாம்பரம், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஆகியோர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்தனர்.

பின்னர் மக்களின் கோரிக்கையை பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் கவனத்திற்கு இவர்கள் கொண்டு வந்தனர்.

இதன்படி பொலிஸ்மா அதிபர் வழங்கிய வாக்குறுதி பற்றி பழனி திகாம்பரம் மற்றும் வேலு குமார் ஆகிய இருவரும் மக்களிடம் எடுத்து கூறியதற்கு இணங்க ஆர்பாட்டம் கைவிடப்பட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

4 அடி உயரமான கதவில் 06 அடி மனிதன் தூக்கில் தொங்கியதாக கூறப்படும் விடயம் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com