புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

புங்குடுதீவு மாணவி கொலை வழக்குத் தொடர்பில் டி.என்.ஏ அறிக்கை மற்றும் சான்று பொருட்களின் பகுப்பாய்வு அறிக்கைள் என்பன குற்றப்புலனாய்வு பொலிஸாரால் இன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாத நிலையில்  இவ் வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று திங்கட்கிழமை (28) நீதிவான் றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது சந்தேக நபர்களுடன் கதைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த சந்தேகநபர்கள் சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணியினால் விடுக்கப்பட்டது.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில், 5ஆம் மற்றும் 6ஆம் சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் விசேட அனுமதியைப் பெற்றுச் சந்திக்க முடியும் என்றும் சாதாரணமாகச் சந்திக்க முடியாது எனவும் ஊர்காவற்றுறை நீதவான் ஏம்.எம்.எம்.றியால் தெரிவித்தார். 





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com