புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு – 12 ஆம் திகதிக்குள் யாழ்.மேல் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு இன்றையதினம் நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிலையில் குற்றப் பகிர்வுப் பத்திரம் மற்றும் வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தால் உயர்நீதிமன்றில் பாராப்படுத்தப்படும் என அரச சட்டவாதியான நாகரத்தினம் நிசாந் தெரிவித்துள்ளார்.

இன்றைய வழக்கில் குற்றச் சந்தேக நபர்கள் 09 பேர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களில் 04 ஆம், 7 ஆம், 09 ஆம் சந்தேப நபர்களிற்காக சரத் பல்கம எனும் சட்டத்தரணி மன்றில் ஆஜராகி வாதாடிவரும் நிலையில் ஏனையவர்களான தங்களிற்காக வாதாட யாழ்ப்பாணத்திலுள்ள சட்டத்தரணிகள் எவரும் முன்வராததாகத் தெரிவித்துள்ள குற்றச் சந்தேக நபர்கள்  தமது பக்க நியாயங்களை தெரியப்படுத்த முடியாதுள்ளதாகவும் வேறு மாவட்டங்களைச்சேர்ந்த சட்டத்தரணிகளை நியமிக்க தம்மிடம் வசதி இல்லை எனவும்  மன்றில் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com