புகையிரத சேவை அத்தியவசியமானது; வர்த்தமானி வெளியீடு

புகையிரத சேவை அத்தியவசியமான சேவை என பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத சாரதிகளால் கடந்த புதன்கிழமை நள்ளிரவு (07) ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டத்தின் காரணமாக, பொதுமக்கள் பாரிய அசெளகரியத்தை எதிர்நோக்கியுள்ளதை கருத்திற்கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் வியாழக்கிழமையும் (07), ஜனாதிபதி செயலாளருடன் இன்றும் (08) இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கவில்லை என, புகையிரத சங்கம் அறிவித்திருந்ததுடன், தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com