புகையிரத கடவையில் விபத்து – ஆசிரியர் பலி

கிளிநொச்சி, கட்டை பகுதியில் புகையிரதம் மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்று (25) மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில், யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதமும் புகையிரதக் கடவையை கடக்க முற்ப்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் கிளிநொச்சி அன்னை சாரதாதேவி வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் என். கவிந்திரன் என பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com