புகையிரத கடவையருகில் இளைஞன் சடலமாக மீட்பு

அனுராதபுரம் – யாழ்ப்பாணம் வீதியில் ஹத்தரெஸ்வெல புகையிரத கடவைக்கு அருகில் 25 வயதான இளைஞனின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கவரக்குளம் பிரதேசத்தை சேர்ந்த தனுஷ்க தனஞ்சய பண்டார என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது தலையின் நடுவில் காயம் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இளைஞனை கொலை செய்து கொண்டு வந்து போட்டார்களா? அல்லது புகையிரத கடவைக்கு அருகில் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? என்ற சந்தேகம் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com