சற்று முன்
Home / செய்திகள் / புகையிரதத்தில் மோதி 14 வயது மாணவன் பலி – கிளிநொச்சியில் சம்பவம்

புகையிரதத்தில் மோதி 14 வயது மாணவன் பலி – கிளிநொச்சியில் சம்பவம்

நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தபால் புகையிரதத்தில் மோதுண்டு மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

14 வயது இராஜஸ்வரன் லதுசான் என்ற மாணவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதிக்கும் கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இடையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து புகையிரத்தில் பலியான சிறுவனை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி புகையிரத நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com