சற்று முன்
Home / செய்திகள் / பீனிக்ஸ் பறவையாகி இரண்டாவது ஆண்டில் தடம் பதிக்கிறோம்

பீனிக்ஸ் பறவையாகி இரண்டாவது ஆண்டில் தடம் பதிக்கிறோம்

“தமிழர் திருநாளில்” வாகீசத்தின் ஊடாக வாசக நெஞ்சங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இற்றைக்கு ஏழு வருடங்களுக்கு முன்னர் தனியொரு கிராமத்தின் செய்திகளை புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அறியப்பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கிராமிய தளம் தான் “வாகீசம்”.

கிராமிய தளமாகவும், இலக்கிய தளமாகவும் செயற்பட்டுவந்த வாகீசம் இணையம் கடந்த 2016 ஆம் ஆண்டு தை மாதம் இலங்கை அமைச்சினால் பதிவுசெய்யப்பட்டு செய்தி இணையமாக தனது உத்தியோகபூர்வ பயணத்தை 14.01.2016 தமிழர் திருநாளாம் தைத் திருநாளில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பித்தது.

செய்தி இணையமாக பரிணாமம் பெற்று இன்று அதன் முதலாம் ஆண்டினைக் கொண்டாடும் வாகீசம் இணையம். யாழ்ப்பாத்திலிருந்து செய்திகளை வழங்கும் முன்னணி செய்தி இணையமான வளர்ச்சியடைந்துள்ளபோதிலும் அதன் ஆரம்ப நிகழ்வில் உறுதியளித்தது போல அரசியல் செய்திகளுக்கு அப்பால் சமூகம் சார்ந்த செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லையோ என்ற ஓர் உள்ளுணர்வு இருக்கத்தான் செய்கின்றது. எனினும் மக்களுக்கு எதிரான மேற்கொள்ளப்பட்டுவரும் சில மோசடிகள் குறித்த செய்திகளை புலனாய்வு செய்து மக்கள் மத்தியில் விளிப்புணர்வை ஏற்படுத்தியதில் வாகீசம்இன்றைய தினத்தில்  பெருமை கொள்கின்றது.

எமது சீரிய பாதையில் தொடரந்து பயணிப்போம்

தமது செய்தித் தளங்களில் வாசகர் வருகை வீதத்தை உச்சத்தில் வைத்திருப்பதற்காக கட்டமைப்கப்பட்ட போலிகளையும் காலங்க கடந்த செய்திகளை புனைவுகளாகவும் (2009 இல் என்ன நடந்தது அதிர்ச்சி) சில விரசமான செய்திகளையும் தாங்கிவர வாகீசம் வெறும் வாசகர் அதிகரிப்பிற்காக இவற்றைக் கையிலெடுப்பதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டுடனேயே தனித்துவமானவே இதுவரை பயணித்துள்ளது. இதே சீரிய பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என இந் நாளில் உறுதிவளங்குகின்றோம்.

எமக்குப் பின்புலத்தில் அரசியல் இல்லை அதுவே எமது வெற்றி

இணையங்கள் பலவற்றை அரசியல்வாதிகளே நிர்வகித்துவரும் இன்றைய சூழலில் வாகீசம் எந்த அரசியல் கட்சியிடமோ அரசியல் வாதியிடமோ இதுவரை கையேந்தி நிற்கவில்லை. நிற்கப்போவதுமில்லை. இதனால்தான் அவர்களிற்கு எதிராகக் கிடைக்கும் செய்திகளை எதுவித மனக் கூச்சமும் இன்றி இருட்டடிப்புச் செய்யாது வெளிப்படுத்தியிருக்கிறோம்.

வர்த்தகர்கள் –  ஆதரவாளர்கள் உதவிடுங்கள்

வாகீசத்தின் பணியாளர்கள் பெரும்பாலும் தமக்கான வேறு பணிகளை வைத்துக்கொண்டு வாகீசத்தை ஒரு சேவையாகவே மேற்கொண்டுவருகின்றோம் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனினும் இணையத்தை பராமரிப்பதற்கான செலவுகளைச் சமாளிப்பதென்பது கொஞ்சம் கடினமான நிலைமைதான். வாகீசத்தில் விளம்பரம் செய்யும் வர்த்தகர்களை நம்பியே எமது பயணம் பயணிக்கிறது. ஆனாலும் விளம்பரங்களை நம்பியிருக்கும் இன்றைய உலகில் எமக்கு விளம்பரம் பெறுவது குதிரைக் கொம்பான நிலைமைதான். இதுவரையான காலத்தில் எமக்கு ஒத்துளைத்த வர்த்தகப் பெருந்தகைகளிற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வாகீசத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வர்த்தகர்கள் மற்றும் நிதிசார் ஆதரவாளர்களின் பங்களிப்பினை இந் தருணத்தில் எதிர்பார்க்கின்றோம்.

மாணவர்களிற்கான போட்டிகள்

தனது ஆண்டுவிழாக்களை பிரமாண்டமாக கொண்டாட விளையாத வாகீசம் இணையமானது பாடசாலை மாணவர்களிடையே மருவிவரும் எழுத்தாற்றலை மேம்படுத்த மாணவர் கையெழுத்து சஞ்சிகைப் போட்டியினை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. வாகீசம் இணையமானது வருடந்தோறும் அதனை முன்னெடுப்பதற்குமான  செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. தற்போது இதற்கான அனுசரணையாளர்களை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இருப்பதால் 01.02.2017 இற்கு முன்னர் இப் போட்டிகள் விதிமுறைகள் பற்றிய விபரங்கள் அடங்கிய உத்தியோகபூர்வ  அறிவித்தலை வெளியிட தீர்மானித்துள்ளோம் என்ற மகிழ்வான செய்தியை பகிர்ந்துகொள்கின்றோம்.

வாகசர்கள் விளம்பரதாரர்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

நன்றி

வாகீசம் இணையக் குடும்பத்தினர்

தொடர்புகளிற்கு – vakeesamnews@gmail.com

0094 777 795 743

 

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com