சற்று முன்
Home / செய்திகள் / பிள்ளையை அழைத்துச் செல்ல பாடசாலை சென்ற தந்தை சுட்டுக்கொலை

பிள்ளையை அழைத்துச் செல்ல பாடசாலை சென்ற தந்தை சுட்டுக்கொலை

காலி , அக்மீமன பாடசாலை ஒன்றிற்குள் பிரவேசிக்க முயன்ற ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இறந்த பின்னர் அந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டமை அறிந்ததே.

இது தொடர்பில் பொலிஸார் நடத்திய விசாரணையின்போது ,பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் தந்தையே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த மாணவர் சுகயீனமுற்றிருப்பதாக பாடசாலையில் இருந்து சென்ற தொலைபேசி அழைப்பு ஒன்றையடுத்து மேற்படி தந்தை பாடசாலைக்கு வந்துள்ளார்.அவர் உட்பிரவேசிக்க முற்பட்டபோது படைச்சிப்பாய் அவருடன் தர்க்கம் புரிந்து பின்னர் உட்பிரவேசிக்க அனுமதி மறுத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிப்பாயிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com