பிளான் பண்ணிப் பண்ணுறாங்களுங்கோ

Vakeesam # Vairavi Appu - Naadu Nadapu - Savariவண்டில்கார வரைவி அப்புவின்
நாட்டு நடப்புக்களை அலசும் சவாரி – தொடர் (43)

வணக்கமுங்கோ
“சிங்கிசா சிங்கிசா சோப்பு காரு சிங்கிசா. பச்சக் காரு சிங்கிசா. மஞ்ச காரு சிங்கிசா. வண்ண வண்ண காருங்க ஏசி போட்ட காருங்க ஏறி இருந்து பாருங்க ஐடியாவும் வருமுங்க.”
என்ன வைரவி அப்பு பாட்டுப் பலமாக்கிடக்கு கார் பற்றி எல்லாம் பாடுறீங்க கண்டு வருசக்கணக்காப்போச்சு ஏதும் விஷேசமோ. “ஓமடா தம்பி உவங்கள் எங்கட ஊடக அமையக்காறர் கூப்பிட்டவங்கள் மாகாண சபையில சில இளவலுகள் நடப்புத் தெரியாம கண்டபாட்டிற்கு ஊடகங்களப் பற்றிக் கதைச்சுப் போட்டுதுகள் அதுதான் எங்கண்ட ஊடகப் பெடியள் குழம்பிப்போட்டாங்கள். என்ன ஆலோசனைக்கு கூப்பிட்டவங்கள் அதுதான் வந்திட்டுப்போறன்.
உவயின்ர கையில மாகாண சபை கிடைச்ச கையோட எங்கண்ட ஆக்களும் ஏதோ தமிழரசு கிடைச்ச றேஞ்சில செய்தியள் எழுதஇ அந்த சந்தோசத்தோட நானும் எங்களுக்கெண்டு ஒரு ஆட்சி கிடைச்சிட்டுது எனி பேசாம உந்த எழுதுற வேலையள விட்டு ஒதுங்குவம் எண்டு இருந்தனான் தம்பி ஆனால் இண்டைக்கு நாங்கள் நம்பி உவங்களின்ர கையில பொறுப்பக் குடுத்துட்டு உவங்கள் செய்யிற கூத்துக்கள எல்லாம் கைகட்டி வேடிக்கை பாத்துக்கொண்டிருக்கேலாது விளங்குதோ. அதுதான் திரும்பவும் வெளிக்கிட்டிட்டன்.
அது சரி ஐயா உந்த சிங்கிசா சிங்கிசா பாட்டு என்னத்துக்குஇ அதோட மஞ்சள் பத்திரிகை எண்டா என்ன எண்டு எனக்கு விளக்கம் தரோணும்.
அட போடா நீ. என்ர ஏழு வயதுப் பேரப்பொடியன் ஒண்டு தாத்தா தாத்தா மஞ்சள் பத்திரிகை எண்டா என்ன எண்டு கேட்டுட்டான். எனக்கு என்னண்டு அவனுக்கு பதில் சொல்லுறதொண்டு ஏலாமப் போச்சு. உனக்குத் தெரியாதாக்கும் மஞ்சள் பேப்பர் எண்டால் என்ன எண்டு. அப்பிடி ஒரு பேப்பர் நான் அறிஞ்சு இதுவரை யாழ்ப்பாணத்தில இருந்து வரேல்ல கண்டீரோ. ஆபாசமாஇ விரசமா கட்டுரைகள்இ சிறுகதைகள் எழுதி வெளியிடுற பேப்பறுகள மஞ்சள் பேப்பர் எண்டுவீனும்.
ஒண்டு அந்த உறுப்பினர் தம்பி விளக்கம் தெரியமா கதைச்சிருக்கோணும் இல்லாட்டி அதுகள வாசிச்சு வளர்ந்திருக்கோணும். எண்டாலும் உத பிளான் பண்ணித்தான் கதைச்சவ எண்டு ஊடகத் தம்பி ஒண்டு சொல்லிச்சு. சபை அமர்வண்டு விடியக்காத்தால நேரத்தோட வந்து ஏசிக் கார் ஒண்டுக்குள்ள இருந்து இரண்டு மூண்டு உறுப்பினர் தம்பியவ கனநேரமா அங்க இங்க பாத்துப் பாத்து கதைச்சுக்கொண்டு இருந்தவையாம். உவயள் ஏசிக் காறுக்குள்ள இருந்துதான் ஊடங்களிற்கு எதிரா கதைக்கிறது எண்டு சதித்திட்டம் தீட்டியிருக்கீனும் எண்டு ஊடகத்தம்பி சொல்லிச்சு. உவயள் கூடிக்கூடி திட்டம் தீட்டுறதில கொஞ்சம் கில்லாடியள் தான.
உப்பிடித்தான் யூ.எஸ் இல மீற்றிங் போட்டு கூடிக்கதைச்சிட்டுவந்துதான் விவசாய அமைச்சருக்கு எதிராகவும் கதைச்சவயாம்.
ஆனாப் பாரடா தம்பி உவயள் மென்வலுவான ஆக்கள் எப்பிடி உப்பிடி வன்மமாக் கதைக்கீனும் எண்டு விளங்குதில்லயடா. முன்னாள் மன்னற்ற ஆட்சியிலயும் ஒரு அமைச்சர் இருந்தவர் தெரியுமோ பெரிய தெருச் சண்டியன் ஊடகக்காறரை அவருக்கு கண்ணில காட்டேலாது. உவளயின்ர போக்கப்பாத்தாலும் அப்புடித்தான் கிடக்குது. மென்வலு பேசிக்கொண்டு ஊடகங்களுக்கு எதிரா விசமத்தனமான வேலையில வெளிக்கிட்டிருக்கீனும்.
உவையள் தமிழ்த்தேசிய மந்திரம் உச்சரித்துக்கொண்டு காவாலித்தனம் பண்ணுறத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது. எங்கண்ட சனத்தச் சொல்லோணும். ஆர் எவரைண்டு பாக்காம வீட்டுக்குமேல குத்திக் குத்தி எங்கண்ட தேசத்த சாக்கடை ஆக்கிப்போட்டுதுகள்.
உவங்கள் ஆட்சியப் பிடிச்சு இரண்டு மாத்தில மூண்டு வருசம் முடியப்போது உருப்படியா சனத்திற்கு ஒண்டும் செய்தபாடாக் காணேல்ல. சேந்து அழிச்ச பாவத்திற்கு பரிகாரமா உவங்கள் வெள்ளைக்காறங்கள் சனத்திற்கு குடுக்கிற உணவுத்திட்டத்த நடைமுறைப்படுத்த ஒரு தீர்மானம் நிறைவேற்றக்கூட விடுறாங்களில்ல. தங்கண்ட கட்சி ஒப்பிசுக்குள்ள தீர்க்கவேண்டிய பிரச்சினையளை எல்லாம் பொது இடத்தில வச்சு சண்டை பிடிக்கிறாங்கள். என்னத்தச் சொல்லுறது.
போங்கோ வைரவிஅப்பு எல்லாம் உங்கட பேப்பர்காறர் குடுத்த இடம்தான்
“தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசியம் எண்டு உவங்கள் செய்யிற கூத்துக்கள எல்லாம் உங்கட ஆக்கள் கண்டும் காணாம விட்டதால வந்த வினைத்தான் உது நல்லா அனுபவியுங்கோ”
என்னடா தம்பி செய்யிறது. ஊடகம் எண்டுறத தாண்டி எல்லாரும் இன உணர்வில பேசாம இருந்திட்டீனும் . இப்பவும் ஒரு ஊடகத்தம்பி சொல்லிச்சு ஒரு பதினாறு பேற்ற லீலைகள் தொடர்பான லிஸ்ரு ஒண்டு இருக்கெண்டு. வெற வழி இல்லண்டா ஒவ்வொண்டா விட்டிட வேண்டியதுதான் எண்டு கதைச்சவங்கள்.
உவையள் ஒரு பிளானோடதான் அவையிலயும் வெளியாலையும் குழப்பங்கள உண்டுபண்ணுறதா ஒரு தகவலுங்கோ. எல்லாம் மென்வலுவின் மாஸ்ரர் பிளான் எண்டுதான் கதை அடிபடுதுங்கோ. மாகாணசபையை தொடர்ந்து வச்சிருந்தா மைத்திரி-ரணில் யாப்புக்கு விக்கி ஐயா குழு வில்லண்டமா நிக்கும் எண்டு பயப்படீனுமாமுங்கோ. அதுதான் முடிஞ்சா சபையைக் குழப்பி கலைக்க வைக்கிறத்துக்கு பிளான் நடக்குதொண்டு தகவலுங்கோ.
உந்தத் தகவல்களப் பாத்தா எனக்கென்னமோ உந்த வாள் வெட்டு குழு எல்லாம் பிளான் பண்ணிப் பண்ணுறமாதிரித்தானுங்கோ தெரியுது. நாளைக்கு வடக்கில சட்டம் ஒழுங்கு சீரில்ல. உவையள் சபைக்காறர் உதுகளக் கண்டுக்கிறேல்ல எண்டெல்லாம் சபைக்கு ஆப்படிக்க பிளான் நடக்குதுதோ தெரியாதுங்கோ.
போட்டு வாறன்ர தம்பி இரண்டு மூண்டு வருசமாப்போச்சு. ஊடகத்துக்குள்ள வந்து வாறகிழம நல்ல நாட்டு நடப்புக்களோட சனத்தச் சந்திக்கோணும்.
அப்ப போட்டு வாறனுங்கோ.
சவாரி தொடரும்…..
வண்டில்கார வைரவி அப்பு

(30.05.2016)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com