பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டுத்தை  வலுப்படுத்தால் தொடர்பான  கலந்துரையாடல் – தமிழ் மக்கள் பேரவை

பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டுத்தை வலுப்படுத்தால் தொடர்பான கலந்துரையாடலிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

ஆக்கிரமிப்புக்கெதிரான எதிரான குறியீட்டுவடிவமாக மாறியுள்ள கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு  மக்களின் போராட்டம் ஏறத்தாழ ஒரு மாதத்தை எட்டியுள்ளது.

தமது  கொள்கையில் மிகத்தெளிவாகவும் உறுதியாகவும் அந்த அம்மக்கள் சுய எழுச்சியுடன் முன்னெடுத்துள்ள இந்த நியாயமான போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி மேலும் மக்கள்மயப்படுத்த‌ வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

இதுகுறித்து  தமிழர் தாயகப்பகுதிகளில் நாம் செய்யவேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்கள் அமைப்புகளுடனான  கலந்துரையாடல் ஒன்றிற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28/02/2017)மாலை 4 மணிக்கு பலாலிவீதி கோண்டாவிலில் அமைந்துள்ள  சேவா லங்கா நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலுக்கு அனைத்து பொதுஅமைப்புகள் , தொழிற்சங்கங்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொள்கிறது.

 

நன்றி

தமிழ் மக்கள் பேரவை

26/02/17

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com