பிரேரணையைக் கிழித்தெறிந்த தவநாதன் பிரேணைக்கு ஆதரவாக உரை…!

ஜ.நா மனித உரிமைகள் போரவைக்கு சமர்ப்பிப்பதற்கான தீர்மானங்கள் அடங்கிய பிரேணை குறித்த சிறப்பு விவாதம் இன்று (14) வடக்கு மாகாண சபையில் நடைபெற்றபோது சபை நடவடிக்கை ஆரம்பித்த ஒரு சிலநிமிடங்களிலேயே பெரும் சர்ச்சை உருவானதால் பிரேரணையைக் கிழித்து எறிந்தார் எதிர்க்கட்சி உறுப்பினரான தவநாதன்.

குறித்த பிரேரணை கடந்த 09.03.2017 அன்று நடைபெற்ற சபை அமர்வின்போது சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன் பிரதிகளும் சபை உறுப்பினர்களிற்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில்பிரேரணையை முன்மொழிந்த சிவாஜிலிங்கம்  இன்று சபை ஆரம்பிப்பதற்கு முன்னராக பிரேரணையில் சில பகுதிகள் திருத்தப்பட்டுள்ளதாகக் கூறி புதிய பிரதிகளை உறுப்பினர்களிற்கு வழங்கினார்.

பிரேரணை வாசிப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முன்னர் தமக்கு வழங்கப்பட்ட பிரேரணைக்கும் தற்போது வாசிக்கும் பிரேரணைக்கும் தொடர்பில்லை எனக் கூறிய எதிர்க்கட்சியினர் திருத்தங்கள் இருப்பின் அதுதொடர்பில் தாம் முழுமையாக வாசித்து கட்சித்தலைமைகளுடன் கலந்தாலோசிக்க கால அவகாசம் வழங்கவேண்டும் எனக் கூறினர்.

அதன்போது திடீரென பிரேணையை எதிர்க்கட்சி உறுப்பினரான தவநாதன் கிழ்த்து அதன் பாகங்களை வீசி எறிந்து அதனை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனக் கூறினார்.

எனினும் முன்னைய பிரேரணையின் திருத்தமே இது என கூறப்பட்டதை அவையினர் ஏற்றுக்கொண்ட நிலையில் பிரேணை மற்றும் திருத்தங்களின் வாசிப்பின் பின்னரான விவாதத்தில் உரையாற்றிய தவநாதன் இரு பிரேணைகளாகத் தோன்றியதால் தான் கிழித்து எறிந்ததாகவும் எனினும் இது தமிழ் மக்களிற்கு நன்மை பயக்கும் பிரேரணை ஆதலால் தாம் அதனை ஆதரிப்பதாக உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com