பிரபாகரன் உயிரோடு என்பதால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ரன் உயி­ரோடு உள்­ள­தாக பழ.நெடு­மா­ற­னும், அமைச்­சர் ப.டெனிஸ்­வ­ர­னும் அடித்­துக் கூறு­கின்­ற­னர்.

இவர்­க­ளின் கருத்து தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமை­வ­தால் வடக்­கில் இருந்து இரா­ணு­வத்தை மாத்­தி­ர­மல்ல இரா­ணுவ முகாம்­க­ளை­யும் அகற்­றக் கூடாது. இவ்­வாறு ஜாதிக ஹெல உறு­மய தெரி­வித்­தது.

ஜாதிக ஹெல உறு­ம­ய­வின் ஊட­கப் பேச்­சா­ளர் நிசாந்த வர்­ணகு­ல­சூ­ரிய மேலும் கூறி­ய­ தா­வது,

பிர­பா­க­ரன் இறு­திப் போரின்­போது எமது இரா­ணு­வத்­தின் தாக்­கு­த­லில் இறந்­து­விட்­ட­தா­க நாம் அறிந்­தோம். என்­றா­லும், பிர­பா­க­ரன் உயி­ரி­ழக்­க­வில்லை. அவர் உயி­ரோ­டு­தான் இருக்­கின்­றார் என்று தமி­ழக அர­சி­யல் தலை­வர் பழ.நெடு­மா­றன் மற்­றும் வடக்கு மாகாண அமைச்­சர் ப.டெனிஸ்­வ­ரன் உள்­ளிட்­டோர் கூறி ­வ­ரு­கின்­ற­னர்.

அவர்­க­ளின் கருத்து தேசிய பாது­காப்­புக்­குச் சவால் விடும் வகை­யில் அமைந்­துள்­ளது. எனவே, ஒரு­போ­தும் வடக்­கில் இருந்து இரா­ணு­வத்­தை­யும், இரா­ணுவ முகாம்­க­ளை­யும் அகற்­றக் கூடாது – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com