பிரபாகரனை மீட்கவில்லை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மீட்க முயற்சிக்கவில்லை என இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை மீட்பதற்கு முயற்சித்ததாக செய்யப்படும் பிரச்சாரங்கள் வெறும் கற்பனையே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தெடர்பில் மேலும் தெரிவித்த அவர், தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்களை அமெரிக்க தாக்கி அழித்தது என்ற தகவல் பொய்யானது. எனினும் புலிகளின் கப்பல்களின் நிலைகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை இலங்கைக் கடற்படையினருக்கு வழங்கினோம். பிரபாகரன் உயிரிழந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ளன. இந் நிலையிலும் கற்பனைகளும் வதந்திகளும் தொடர்கிறன.

2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் நான் இலங்கையில் தூதுவராக கடமையாற்றினேன்.

காலத்திற்கு காலம் வெளியாகி வரும் கற்பனை கதைகள் பிழையான தகவல்கள் பற்றி தெளிவளிக்கப்பட வேண்டியது அவசியமானது என எண்ணுகின்றேன். புலிகளுக்கு உதவும் எவ்வித நோக்கமும் எங்களுக்கு இருக்கவில்லை.  எனினும் அப்பாவி பொதுமக்களை மீட்பதற்கு கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

2015ம் ஆண்டு தேர்தல் இலங்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எனினும், காணாமல் போனோர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் காத்திரமான தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்படவில்லை என ரொபர்ட் ஓ பிளக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com