பிரபாகரனிடம் விசாரணை – சுமார் 200 பேர் தடுத்துவைப்பு

சென்னை இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்ட முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞரை பிடித்து தமிழக பொலிசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேவேளை கருத்தரங்கிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, எஸ்.டி.பி.ஐ, தமிழக மக்கள் முன்னனி, தமிழ்த்தேச குடியரசு இயக்கம்,  பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் தமிழக மக்கள் ஜனநாயக முன்னனி உள்ளிட்டஅமைப்புக்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரையும் தமிழக பொலிசார் தடுத்துவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds