சற்று முன்
Home / உலகம் / பிரபல தமிழ் சட்டவாளர் திருமதி வாசுகி முருகதாஸிற்கு மலேசியாவில் விருது வழங்கி கொளரவிப்பு!

பிரபல தமிழ் சட்டவாளர் திருமதி வாசுகி முருகதாஸிற்கு மலேசியாவில் விருது வழங்கி கொளரவிப்பு!

லண்டனில் சேவையாற்றிவரும் தமிழ் சட்டத்தரணியாகிய திருமதி வாசுகி முருகதாஸ்
அவர்களுக்கு மலேசியாவில் ‘நகைச்சுவை கலைநாயகி’ விருது வழங்கி கொளரவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சிலம்பன் சுற்றுதொடர் நிகழ்வில் இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.

மலேசியாவை சேர்ந்த MUHIBAH SILAMBAM கழகம் நடத்திய சிலம்பாட்டக்கலைக்கான முதலாவது ஆசிய சுற்றுத்தொடர் கடந்த செப்டெம்பர் மாதம் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது. இலங்கை இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் பங்குபற்றிய இத்தொடரின் சிறப்பு விருந்தினராக லண்டனைச் சேர்ந்த சட்டவாளர் திருமதி வாசுகி அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த கழகத்தினால் “லண்டன் மாநகரின் சிறந்த பெண் நகைச்சுவையாளர்” என திருமதி வாசுகி அவர்கள் பாராட்டப்பட்டதுடன் இந்த “நகைச்சுவை கலைநாயகி” விருதும் வழங்கி கொளரவிக்கப்பட்டுள்ளார்.

ஈழத்தமிழர்கள் பல்துறைகளிலும் சர்வதேச ரீதியில் சிறந்து விளங்குவதற்கு இது நல்ல உதாரணமாகும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

26 வகையான கொரோனா தடுப்பூசிகளில் 4 பாதுகாப்பானவை

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுவரும் 26 வகையான கொரோனா தடுப்பூசிகளில் 4 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளதாக ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com