பிரபல கார்ட்டூன் கலைஞர் தயா காலமானார்

(26.07.2015) பிரபல கார்ட்டூன் கலைஞரும் ஓவியருமான தயா ராஜபக்ஷ, இன்று ஞாயிற்றுக்கிழமை (26) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து காலமானார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜயா குழுமம் மற்றும் விஜய் பத்திரிக்கை ஆகியவற்றுடன் இணைந்து செயலாற்றிய இவர், தனது 78ஆவது வயதில் காலமானார்.
சிலுமின பத்திரிக்கையின் வானரயோ என்ற சித்திரக்கதைக்கு இவர் வரைய ஆரம்பித்தார். இவரால் உருவாக்கப்பட்ட சக்வித்தி சுவிய, ஹூலவாலி தவலம ஆகிய சித்திரக்கதைகள் திரைக்கதைகளாக ஒளிபரப்பப்பட்டன.
மேலும், தூலாரி, ஹதேவசம, பொரலுபார, அனுபமா ஆகிய சித்திரக்கதைகளுக்கும் இவர் சித்திரம் வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com