சற்று முன்
Home / செய்திகள் / பிரதமா் பதவியை இராஜினாமா செய்த ரணில் அலாி மாளிகையிலிருந்து வெளியியேறினார்

பிரதமா் பதவியை இராஜினாமா செய்த ரணில் அலாி மாளிகையிலிருந்து வெளியியேறினார்

பிரதமா் பதவியை இராஜினாமா செய்த ரணில் விக்கிரமசிங்க அலாி மாளிகையிலிருந்து வெளியியேறியுள்ளாா்.

அத்துடன் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் அக் கடிதம் ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தனது இராஜினாமா குறித்து விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ,ஆட்சிக்கான பெரும்பான்மை பலம் இருந்தாலும் ஜனநாயக மாண்புகளை மதித்து மக்கள் தீர்ப்பை ஏற்று தாம் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

”நான் நேற்று ஜனாதிபதி கோட்டாபயவுடன் பேச்சு நடத்தினேன்.அதனடிப்படையில் எனது பதவியை இராஜினாமா செய்கிறேன்.” என்றும் அந்த அறிக்கையில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.(அறிக்கை இணைப்பு )

இதேவேளை புதிய அரசு அமைந்தவுடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு உடனடி தேர்தலுக்கு செல்வது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. அப்படி கலைக்கப்பட்டால் இந்த தற்காலிக அரசு பாராளுமன்ற தேர்தல்வரை இயங்கும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com