பிரதமர் ரணில் விரைவில் கைது செய்யப்படுவார் – வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு

vasuthevaபிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இருவரும் கைது செய்யப்படுவது உறுதியாகி உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் போது அதில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் ஊழல்கள் வெளிப்படும். அவ்வாறு அர்ஜூன் மகேந்திரன் ஊழல்களில் மாட்டிக்கொண்டாரானால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஊழல் தொடர்பில் சிக்கிக்கொள்வார் என்று குறிப்பிட்டார்.

கோப் குழுவின் அறிக்கைகளின் படி அர்ஜூன் மகேந்திரன் கைது செய்யப்படுவார். அவரைத் தொடர்ந்து பிரதமரும் நிச்சயம் கைது செய்யப்படுவார், அதற்கு காரணம் அர்ஜூன் மகேந்திரனுக்கும் பிரதமருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com